சென்னை : உடல்நிலை பாதிப்பால் உயிரிழந்த பட்டினப்பாக்கம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளரின் திருவுருவ படத்திற்கு காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும்சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மலரஞ்சலி செலுத்தினர்.
சென்னை பெருநகர காவல், E-5 பட்டினப்பாக்கம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.R.மணிமாறன் அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர், சிகிச்சை பலனின்றி இன்று 01.07.2020 அதிகாலை உயிரிழந்தார்.
தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் திரு.J.K..திரிபாதி,IPS., அவர்கள் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., அவர்கள் இன்று 01.07.2020 மாலை E-5 பட்டினப்பாக்கம் காவல் நிலைய வளாகத்தில், மறைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. R.மணிமாறன் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். தொடர்ந்து சென்னை பெருநகர காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (தெற்கு) திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா,இ.கா.ப., இணை ஆணையாளர் (கிழக்கு மண்டலம்) திரு.ர.சுதாகர்,இ.கா.ப., துணை ஆணையாளர் திரு.கே.ராஜேந்திரன், (மத்திய குற்றப்பிரிவு/பொறுப்பு மயிலாப்பூர்) மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.