இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் குந்துகால் பகுதியில் இருந்து இலங்கைக்கு சுமார் 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான மஞ்சளை கடத்தவிருந்த 3 கடத்தல்காரர்களை கைது செய்தும், ஒரு காரை பறிமுதல் செய்தும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் Dr.V.வருண்குமார், IPS., அவர்கள் அதிரடி நடவடிக்கை.
வீடு புகுந்து செல் போன் திருடியவர் கைது.
24.07.2020-ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள தெளிச்சாத்தநல்லூர் பகுதியில், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பாண்டீஸ்வரன் என்பவரது செல்போனை திருடிச் சென்ற, அருப்புக் கோட்டையைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரை SI திரு.குமரேசன் அவர்கள் U/s 380 IPC-ன் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
ஆயுதப்படையில் காவலர்களுக்கு யோகா பயிற்சி
25.07.2020-ம் தேதி இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.N.M.மயில்வாகனன் IPS., அவர்களின் உத்தரவின்படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.V.வருண் குமார் IPS., அவர்களின் முன்னிலையில் இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படையில் காவலர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்தவர் கைது.
23.07.2020-ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கீழப்பள்ளிவாசல் தெருவில், அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த அபுதாலிப் என்பவரை SI திரு.குமரேசன் அவர்கள் U/s 5,7, (3) Lottery Regulation act 1992-ன் கீழ் கைது செய்தார்.நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்