சென்னை:ஒரு வழக்கில், முதல் தகவல் அறிக்கை முதல், குற்றப்பத்திரிகை வரையிலான ஆவணங்கள், இனிமேல் கையெழுத்தாக இல்லாமல், கணினி மூலம் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். இதற்கான
ஒப்புதலை, உயர் நீதிமன்றம் வழங்கி உள்ளது; அக்., 2 முதல், இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது.காவல் நிலையங்களில், 2016 ஏப்., முதல், முதல் தகவல் அறிக்கை மட்டும், கணினி மூலம் பிரின்ட் எடுக்கப்பட்டு, வழங்கப்படுகிறது. மேல்முறையீடுமுதல் தகவல் அறிக்கை, சம்பவ இடத்தை பார்வையிடுதல், கைது, பறிமுதல், குற்றப் பத்திரிகை, வழக்கின் தீர்ப்பு,
மேல்முறையீடு என, ஒரு வழக்கு, ஏழு கட்டங்களாக பிரிக்கப்படுகிறது.ஒவ்வொரு கட்டத்துக்கும் என, ஒவ்வொரு படிவம் உள்ளது. முதல் தகவல் அறிக்கை தவிர மற்ற படிவங்கள் எல்லாம், கையால் எழுதுதல் மற்றும் தட்டச்சால், பதிவு செய்யப்படுகிறது.
இனி, வழக்கின் தீர்ப்பு மற்றும் மேல்முறையீடு தவிர்த்து, மற்ற ஐந்து கட்டங்களுக்கான படிவங்கள், கணினி மூலம் தயாரிக்கப்பட உள்ளன. ஏற்கனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தில், சோதனை ரீதியாக இந்த நடைமுறை செயல்படுத்தப்பட்டது. அதில் நல்ல முன்னேற்றம் இருப்பதால், அனைத்து காவல் நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
முதன்முறைகாந்தி ஜெயந்தி தினமான, அக்., 2 முதல், ஐந்து படிவங்கள் வரை, கணினி மூலம் தயாராக உள்ளன. இந்தியாவில், முதன்முறையாக தமிழகத்தில் தான்,
இந்த திட்டம் அமலுக்கு வருகிறது.புதிய திட்டம் அமலுக்கு வரும் போது, ஒருவரது புகார் எந்த நிலையில் உள்ளது என்பதை, புகார்தாரரும் அறிய முடியும்; அதிகாரிகளும், புகார்களின் நிலவரத்தை கண்காணிக்க முடியும்.
தமிழக அரசின் இந்த திட்டத்துக்கு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, எஸ்.கே.கவுல் ஒப்புதல் வழங்கி உள்ளார்.