சென்னை: சென்னை, செனாய் நகரில் இயங்கி வரும் விப்ராஸ் ஆட்ஸ் என்ற விளம்பர கம்பெனியின் மூலம் விளம்பரம் செய்து சுமார் ரூ. 75 லட்சம் மோசடி செய்த வழக்கில் 7 வருடம் தலைமறைவாக இருந்த பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் குமார் சர்மா (எ) சர்மா என்பவர், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் குழுவினரால் கைது.CCB team of Greater Chennai Police arrested Sanjay Kumar Sharma @ Sharma who was absconding for 7 years in a case of cheating Rs.75 lakh from an advertising company in Shenoy Nagar, Chennai. திருமதி. கஜலட்சுமி என்பவர் சென்னை, செனாய் நகரில் விப்ராஸ் ஆட்ஸ் என்ற பெயரில் தினசரி நாளிதழ், வாராந்திர புத்தகம் மற்றும் எப்.எம் ரேடியோ (F.M.Radio ) ஆகியவற்றில் விளம்பரம் செய்யும் தொழில் செய்து வருவதாகவும், எதிரிகள் 1) கோபால் ஐயர், 2) சிவாஜி பட்கர் 3) சஞ்சய் குமார் சர்மா (எ) சர்மா, ஆகியோர்கள் SCO 22, 23, first Floor, K10 Tower, Feroze Gandhi Market, Ludhina, Punjab என்ற இடத்தில் M/sK.K.PR & Advertisers என்ற விளம்பரம் செய்யும் தொழில் செய்து வருவதாகவும், மேற்படி எதிரிகளுக்கு தமிழகத்தில் தேவையான விளம்பரங்களை செய்து கொடுக்கும் படி கடந்த 01.11.2014 ஆம் தேதி கோபால் ஐயர் என்பவர் மூலமாக அறிமுகமாகிய 1 ) சஞ்சய்குமார் சர்மா (எ) சர்மா 2 ) சிவாஜி பட்கர் ஆகியோர் நேரில் வந்து புகார்தாரரிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க நவம்பர் 2014 முதல் ஜனவரி 2015 வரை மேற்படி நிறுவனத்திற்காக விளம்பரத்தை செய்ததாகவும், அதற்கான தொகை ரூ.75,19,039/ -த்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்தது சம்மந்தமாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இவ்வழக்கின் சம்மந்தப்பட்ட மேற்படி 3 நபர்களும் விசாரணைக்கு ஆஜராகாமல் கடந்த 2015 ம் ஆண்டு முதல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தநிலையில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா, ப, அவர்களின் உத்தரவின் பேரிலும், திருமதி. P.C. தேன்மொழி, கூடுதல் ஆணையாளர், மத்திய குற்றப்பிரிவு அவர்களின் அறிவுறுத்தலின் பேரிலும் மத்திய குற்றப்பிரிவு, EDF -Iஅணி-2காவல்ஆய்வாளர்அவர்களின்தலைமையிலான காவல் தனிப்படையினர் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் SCO 22, 23 K10, 1st Floor , Feroze Gandhi Market , என்ற விளம்பர கம்பெனியின் அலுவலகத்தின் முன்பு வைத்து திரு.சஞ்சய் குமார் சர்மா ( எ ) சர்மா (ஆ/51) என்பவரை கடந்த 08.03.2022 அன்று கைது செய்தனர். மேற்படி எதிரி மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.