திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப. சரவணன்., இ.கா.ப., அவர்கள், சட்ட விரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மாவட்ட காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார்கள். இதனைத் தொடர்ந்து 03.04.2022-ம் தேதி அன்று மட்டும் தீவிர சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்ட 7 நபர்களை TNP Act -ன் கீழ் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த 66 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.