சென்னை: நுங்கம்பாக்கம் மற்றும் ஆயிரம் விளக்கு பகுதியில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் பதுக்கி வைத்திருந்த 7 நபர்கள் நுங்கம்பாக்கம் மற்றும் ஆயிரம் விளக்கு காவல் குழுவினரால் கைது. 8.7 கிலோ கஞ்சா, 1230 போதை மாத்திரைகள், 11 இருமல் சிரப்பாட்டில்கள், 4 Air Gun, 135 கிராம் Pellets, 2 கத்திகள் மற்றும் இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டது. Nungambakkam and Thousand lights Police arrested 7 persons for possession of ganja and drugs . 8.7 kg of ganja, 1230 pills, 11 cough syrups bottles, 4 air guns, 135 g pellets, 2 knives and a two wheeler were seized. சென்னை பெருநகரில் போதை பொருள் தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, F-3 நுங்கம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் நேற்று (26.03.2022) நமச்சிவாயபுரம் ரயில்வே பாலத்தின் அருகே ரகசியமாக கண்காணித்தபோது, அங்கு 3 நபர்கள் கஞ்சாவை பதுக்கி வைத்து, ரகசியமாக விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. அதன்பேரில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த 1.சுரேஷ் (எ) கண்ணன், (வ/39) புது பெருங்களத்தூர், 2.முகமது ஜான், (வ/40) குரோம்பேட்டை. 3.இப்ராஹிம் பாட்ஷா, (வ/40) அரும்பாக்கம் ஆகிய 3 நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அவர்களிடமிருந்து 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போலீசாரின் விசாரணையில் கைது செய்யப்பட்ட சுரேஷ் (எ) கண்ணன் மீது 1 கொலை மற்றும் 2 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 4 வழக்குகளும், முகமது ஜான் என்பவர் F-5 சூளைமேடு காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி என்பதும், இவர் மீது 2 கொலை வழக்குகள், 1 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 5 வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. மேலும் F-4 ஆயிரம் விளக்கு காவல் நிலைய ஆய்வாளர் லைமையிலான காவல் குழுவினர் நேற்று (26.03.2022) ஆயிரம் விளக்கு, சுதந்திரா நகர், குடிசை மாற்று வாரிய குடியிருப்பு ஏ பிளாக் மொட்டை மாடியில் சோதனை செய்த போது, அங்கு விற்பனைக்காக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
அதன் பேரில் மேற்படி இடத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்களை பதுக்கி வைத்திருந்த 1.அத்னன் அலிபேக்(வ/31) இராயப்பேட்டை, 2.முகமதுஷா மிர்கான்(வ/38) ஐஸ்ஹவுஸ், 3.நைனா (எ) தீபக் (எ) தீபக் குமார்,(வ/21) நுங்கம்பாக்கம், ஆகிய 3 நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து 1.3 கிலோ கஞ்சா, 630 போதை மாத்திரைகள், 11 இருமல் சிரப் பாட்டில்கள் 4 Air Gun, 135 கிராம் Pellets மற்றும் 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாகயிருந்த 4.முகமது முதாதீர், (வ/26) குரோம்பேட்டை, என்பவரை இன்று (27.03.2022) கைது செய்தனர். அவரிடமிருந்து 1.4 கிலோ கஞ்சா, 600 போதை மாத்திரைகள் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்ட முகமது முதாதீர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.