மதுரை : மதுரை இஸ்மாயில்புரத்தைச் சேர்ந்த கார்த்திக், விசாரணை கைதியாக சிறையில் உள்ளார். தன்னை உறவினர்கள், நண்பர்கள் சந்திக்க வரவில்லை, என விரக்தியுற்று ஏப்., 22 கண்ணாடி துண்டுகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றார். மதுரை அரசு மருத்துவமனை, கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று முன்தினம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சிறைக்கு திரும்பியவர், ரத்தவாந்தி எடுத்தார். விசாரணையில் அவர் மீண்டும் கண்ணாடி துகள்களை , விழுங்கி தற்கொலைக்கு முயன்றது தெரிந்தது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சிறை நிர்வாகம், தரப்பில் கூறியதாவது, மருத்துவமனையில் கார்த்திக்கை, அவரது மனைவி சந்தித்த போது நேரமாகி விட்டதாக கூறி அங்கிருந்த காவலர், கடுமையாக நடந்து கொண்டார். இதனால் விரக்தியுற்றவர் அங்கிருந்த கண்ணாடியை உடைத்து, துகள்களாக்கி விழுங்கியுள்ளார். இதுகுறித்து டாக்டரிடமோ, மனைவியிடமோ கூறவில்லை. அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, சிறைக்கு அழைத்து வந்தபோதுதான் இவ்விஷயம் தெரிய வந்தது என்றனர்.