மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் பகுதியை சேர்ந்த (16), வயது சிறுமி ஒருவர் அப்பகுதியில், உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், சிறுமியின் வீட்டிற்கு அருகே, 60 வயதான முதியவர் ராசு ,தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். சிறுமியின் குடும்பத்தினர், கூலி வேலை செய்துவந்த நிலையில், பள்ளி மாணவி வீட்டில் தனியாக, இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், பள்ளி மாணவி தனியாக, இருப்பதை முதியவர் ராசு பயன்படுத்தி கொண்டு, சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ஒரு கட்டத்தில் உடல்நலக்குறைவால், கடுமையாக பதிக்கப்பட்ட சிறுமியை, பெற்றோர் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும்,16 வயது சிறுமி கர்ப்பமாக இருப்பது குறித்து குழந்தைகள் நலக்குழு மற்றும் சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு மருத்துவர்கள் தகவல் கொடுத்ததனர். அதன்பேரில், சிறுமியிடம் விசாரணை, நடத்தப்பட்டது. சிறுமி மற்றும் அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சிறுமியை பல மாதங்களாக பாலியல் வன்கொடுமைக்கு, உள்ளாக்கிய முதியவர் ராசுவை, காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கிழ் கைது, செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி