சென்னை : போதைப்பொருள் கடத்தல், தடுப்பு நுண்ணறிவு பிரிவு டி.எஸ்.பி., திரு. டில்லிபாபு, காவல் ஆய்வாளர் திருமதி. வசந்தி, ஆகியோருக்கு கிடைத்த தகவல்படி நேற்று மாலை காஞ்சிபுரம், அடுத்த கீழம்பி பகுதியில், வாகன சோதனையில் காவல் துறையினர், ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி, சோதனை செய்தனர். அப்போது காரில் கஞ்சா பொட்டலங்கள், இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 60 கிலோ என தெரிந்தது. காவல் துறையினர், விசார ணையில், தேனி மாவட்டம், தேவாரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், (39), பாண்டீஸ்வரன், (26), என தெரிந்தது. காவல் துறையினர், இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில், ஆஜர்படுத்தினர். அவர்கள் வந்த காரையும் பறிமுதல் செய்தனர்.