கோவை: கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரி நாராயணன் இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் நடத்திய அதிரடி சோதனையில் சட்டவிரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த 6 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 6.280 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இது போன்ற சட்ட விரோத செயலில் ஈடுபடுவோர் பற்றி தகவல் தெரிவிக்க கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 9498181212 மற்றும் வாட்ஸ்அப் எண் 7708100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்