தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணராஜ் IPS அவர்களின் உத்தரவுப்படி தென்காசி மாவட்டம் முழுவதும் செல்போன்கள் காணாமல் போனதாக தென்காசி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வந்த புகாரின் பேரில் கூடுதல் கண்காணிப்பாளர் திரு. சுவாமிநாதன் அவர்கள் தலைமையில் காவல் ஆய்வாளர் திருமதி. ஜோஸ்லின் அருள்செல்வி, தொழில்நுட்ப பிரிவு சார்பு ஆய்வாளர் திருமதி. செண்பகப் பிரியா மற்றும் காவலர்களின் துரித நடவடிக்கையால் தொலைந்த மற்றும் தவறவிட்ட ரூபாய் 6 லட்சம் மதிப்பிலான 54 செல்போன்கள் மீட்கப்பட்டது.
மேற்படி மீட்கப்பட்ட செல்போன்கள் அதன் உரிமையாளர்களிடம் இன்று 30/13/2022 கொடிக்குறிச்சியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஒப்படைத்தார். மேலும் செல்போன்களை தவறவிட்ட நபர்களுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார். பின்னர் சிறப்பாக பணிபுரிந்து செல்போன்களை மீட்டு கொடுத்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். செல்போன்களை பெற்றுக் கொண்ட நபர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கும் மற்றும் காவல்துறையினருக்கும் தங்களின் நன்றியினை தெரிவித்தனர்.