சென்னை: ஆர்.கே. நகர் மற்றும் நுங்கம்பாக்கம் பகுதிகளில் கஞ்சாவுடன் 6 நபர்கள் கைது. 18 கிலோ கஞ்சா மற்றும் 1 இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டது. சென்னை பெருநகரில் “போதை பொருள் தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் டத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஆர்.கே.நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் 13.03.2022 அன்று காலை I.O.C பேருந்து நிறுத்தம் அருகே கண்காணித்து, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நபர்களிடம் விசாரணை செய்து, அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்த போது, அதில் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்ததின் பேரில் இருவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். போலீசாரின் விசாரணையில் பிடிபட்ட நபர்கள் 1) வடிவேல் (வ/43) தண்டையார்பேட்டை 2) சரவணன் (எ) பாலா (வ/41) தண்டையார்பேட்டை என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 12 கிலோ கஞ்சா மற்றும் 1 இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டது. மேற்படி எதிரிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் நுங்கம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் 14.03.2022 அன்று காலை 10.00 மணியளவில் நுங்கம்பாக்கம், லேக் ஏரியா மெயின் ரோட்டில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் அருகே கண்காணிப்பு பணியிலிருந்த போது, அங்கு சந்தே கத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 4 நபர்களை பிடித்து விசாரணை செய்து அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்த போது அதில் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்ததின் பேரில் 4 நபர்களையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
போலீசாரின் விசாரணையில் பிடிபட்ட நபர்கள் 1) முருகன் (வ/23) திருநெல்வேலி மாவட்டம் 2) பிரவீன்குமார் (வ/23) தூத்துக்குடி மாவட்டம் 3) செல்வம் (வ/20) திருநெல்வேலி மாவட்டம் 4) வேல்முருகன் (வ/20) திருநெல்வேலி என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 6 கிலோ கஞ்சா மற்றும் 2 கத்திகள் கைப்பற்றப்பட்டது. மேற்படி எதிரிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.