சென்னை: கோடம்பாக்கம் பகுதியில், சட்டவிரோதமாக போதைக்கான மாத்திரைகள் விற்பனை செய்த 6 நபர்கள் கோடம்பாக்கம் காவல் குழுவினரால் கைது. 7,125 மாத்திரைகள், 2 லேப்டாப், 1 ஐபேட், 9 செல்போன்கள், பணம் ரூ.4,41,300/- மற்றும் 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல். Kodambakkam Police arrested 6 persons for illegally selling drugs. 7,125 pills including 2 laptops, 1 iPad, 9 mobile phones, cash Rs.4,41,300/- and 3 two wheelers were seized. சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டதின்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில், உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில்.
காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு, தங்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கோடம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் 17.03.2022 அன்று கோடம்பாக்கம், டிரஸ்ட்புர ம் மைதானம் அருகில் கண்காணித்தபோது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி விசாரணை செய்து, அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, டைடல் மற்றும் நைட்ரவிட் உள்ளிட்ட மாத்திரைகள் பெருமளவு மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
அதன்பேரில், சட்டவிரோதமாக மாத்திரைகள் வைத்திருந்த 1) கிஷோர் (வ/23) அசோக்நகர் 2) கிஷோர்குமார் (வ/20) கே.கே.நகர் ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் விசாரணை மேற்கொண்டு, மேற்படி குற்றவாளிகளுடன் தொடர்புடைய 3) பூங்குன்றன் (வ/26) கொத்தவால்சாவடி 4) முத்துபாண்டி (வ/23) விருதுநகர் மாவட்டம், 5) கோகுலன் (வ/24) தேனி மாவட்டம், 6) ராஜலஷ்மி (எ) மித்ரா (பெ/22) பூந்தமல்லி ஆகிய 4 நபர்களை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 4,620 நைட்ரவிட் (Nitravet) மாத்திரைகள், 2,220 டைடல் (Tydol), 145 UNWANTED KIT மாத்திரைகள், 140 ALPRASAFE மாத்திரைகள் என மொத்தம் 7,125 மாத்திரைகள், 2 லேப்டாப், 1 ஐபேட், 9 செல்போன்கள், ரொக்கம் ரூ.4,41,300/- மற்றும் 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் மேற்படி எதிரிகள் வெளிமாநிலத்திலிருந்து கொரியர் மூலம் மாத்திரைகளை மொத்தமாக வாங்கி, சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கொரியர் மற்றும் ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. மேற்படி எதிரிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.