தமிழக காவல்துறையில் 6 காவல் துணை கண்காணிப்பாளர்களை இடமாற்றம் செய்து தமிழக தலைமை செயலாளர் நிரஞ்சன் மார்ட்டி உத்தரவிட்டுள்ளார்.
திரு.தீபக் தாமர் நெல்லை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திரு.ரங்கராஜன் குற்றப்பிரிவு எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நெல்லை ஆணையராக இருந்த திரு.பாஸ்கரன் சென்னை மாவட்ட செயலாக்கத்துறை ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பெரம்பலூர் எஸ்பி திஷா மிட்டல், திருப்பூர் மாவட்ட எஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்ட எஸ்பியாக பணியாற்றிய திருமதி.கயல்விழி, உளுந்தூர்பேட்டை சிறப்பு காவல் படை கமாண்டன்ட்டாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை சிபிசிஐடி எஸ்பி திருமதி.நிஷா பார்த்திபன், பெரம்பலூர் மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.