கோவை: கோவை கிணத்துக்கடவு ,அருகே உள்ள அப்பாச்சி கவுண்டன்பதியை சேர்ர்ந்தவர்காளி முத்து(வயது27). விவசாய கூலி தொழிலாளி. இவர் கடந்த கோவை அரசு மருத்துவமனை அருகே சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக சென்ற அரசு பஸ் (எஸ். 27)மோதி படுகாயம் அடைந்து அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.விபத்தில் அவரது மண்ணீரல் மற்றும் மர்ம உறுப்பு பகுதி பாதிக்கப்பட்டது. இதனால் தொடர்ந்து இன்னும் சிகிச்சையில் உள்ளார். இதைத்தொடர்ந்து தனக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி, கோவை மோட்டார் வாகன விபத்து விசாரணை கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
மனுவை விசாரணை நடத்திய கோர்ட்டு, காளிமுத்துவுக்கு அரசு போக்குவரத்து கழகம் வட்டியுடன் ரூ. 14 லட்சத்து 80 ஆயிரத்தை வழங்க உத்தரவிட்டது. ஆனாலும் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் இந்த தொகையை வழங்க வில்லை. இதைத்தொடர்ந்து காளிமுத்து சார்பில் வக்கீல் தன்ராஜ், நிறைவேற்றக்கோரும் மனுவை தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி முனிராஜ், அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அப்போது வக்கீல் தன்ராஜ், காளிமுத்து, மிகுந்த பாதிப்பில் இருப்பதாலும், வறுமையில் இருப்பதாலும் ஒரு பஸ்சை மட்டும் ஜப்தி செய்தால் மட்டும் தொகையை கொடுக்க மாட்டார்கள். குறைந்தது 6 பஸ்களையாவது ஜப்தி செய்ய உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி 6 பஸ்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.