சென்னை: 564 கோடி பணமோசடி வழக்கு : கோஸ்டல் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத் தலைவர் கைது.நிலக்கரி விலையை அதிகமாக மதிப்பிட்டு, பொதுத்துறை நிறுவனங்கள் நிலக்கரி வாங்குவதற்கு அதிக விலை கொடுத்ததன் மூலம், ₹ 564.48 கோடி பணமோசடி செய்த வழக்கில், சென்னை கோஸ்டல் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் அகமது ஏ.ஆர். புஹாரியை கைது செய்துள்ளதாக அமலாக்க இயக்குனரகம் வெள்ளிக்கிழமை(இன்று) தெரிவித்துள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு கோஸ்டல் எனர்ஜன் நிறுவனம் மற்றும் கோஸ்டல் எனர்ஜி நிறுவனம் மற்றும் அதன் இயக்குனர் அகமது ஏ ஆர் புகாரி ஆகியோர் மீது நிலக்கரி இறக்குமதி விவகாரத்தில் ₹ 564.48 கோடி மோசடி செய்ததாக சி பி ஐ வழக்கு பதிவு செய்ததது. குறிப்பாக இந்தோனேசியா நாட்டில் இருந்து கடந்த 2011-12 மற்றும் 2014-15 ஆகிய ஆண்டுகளுக்கு இடையே நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டது. இதில், தரம் குறைந்த நிலக்கரியை உயர்தர நிலக்கரி என மோசடியாக இறக்குமதி செய்து அரசுக்கு விற்பனை செய்து ஏமாற்றுவதற்காக கூறி குற்ற சதியில் ஈடுபட்டதாகம்வருவாய் புலனாய்வு இயக்ககம் மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்தது. இதன் அடிப்படையில் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.
இதற்காக கோஸ்டல் எனர்ஜி என்ற தனியார் நிறுவனத்தின் இயக்குநரான அகமது ஏ.ஆர். புகாரி, மற்றும் பொதுத்துறை நிறுவனங்களான தேசிய அனல்மின் கழகம், உலோகங்கள் மற்றும் தாதுக்கள் விற்பனை நிறுவனம், ஆரவளி தனியார் மின்நிறுவனம் ஆகியவற்றின் நிர்வாகிகள் மீதும் சி.பி.ஐ. வழக்குபதிவு செய்தது.
இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை செய்ததில் தரமற்ற நிலக்கரியை விற்பனை செய்ததில் 564 கோடி ரூபாயை,போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்து சம்பாதித்தது தெரிய வந்தது.சட்டவிரோதமாக மோசடி செய்த கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை அகமது புகாரியின் வெளிநாட்டு நிறுவனங்களில் பரிமாற்றம் செய்து அதை மீண்டும் இந்திய நிறுவனங்களுக்கு, சட்ட விரோதமாக பணம் பரிமாற்றம் செய்ததையும் அமலாக்கத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து கடந்த 2020 ஆம் ஆண்டு சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் அகமது புகாரியின் கோஸ்டல் எனர்ஜன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான 557 கோடி ரூபாய் அமலாக்கத் துறை யினரால் முடக்கப்பட்டது.