கோவை: கோவைபக்கம் உள்ள தொண்டாமுத்தூர்-போளுவாம்பட்டி ரோட்டில் புதிய கடைகள் கட்டுவதற்கான கட்டுமானப் பணி நடந்து வருகிறது .இதில் தர்மபுரி மாவட்டம் ,அரூர்,மாம்பட்டியை சேர்ந்த சின்னத்தம்பி ( வயது 60) மற்றும் சிலதொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். மொத்தம் 8 அறைகள் கட்டப்பட்டு இருந்தது. ஹாலாபிளாக் மூலம் கட்டப்பட்ட 7-வது அறை நேற்று மாலை 3.40 மணிக்கு திடீரென இடிந்து விழுந்தது. அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த த ர்மபுரியை சேர்ந்த தங்கராஜ் மகள் சன்சிகா (வயது 5) இடையர்பாளையம் சிவாஜி காலனியை சேர்ந்த சந்திரிகா மகள் தேவி என்ற தேவசேனா (வயது 5) இருவரும் இடிபாட்டுக்குள் சிக்கி படுகாயம் அடைந்தனர்.
இவர்களை சிகிச்சைக்காக தொண்டாமுத்தூர் அரசு மருத்துவனைக்கு எடுத்துச் சென்றனர் .குழந்தை சன்சிகா வழியில் பரிதாபமாக இறந்தது. படுகாயமடைந்த தேவி என்ற தேவ சீனா கோவை அரசு மருத்துவமனை சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தொண்டாமுத்தூர் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். இதுதொடர்பாக இடையர் பாளையத்தை சேர்ந்த மேஸ்திரி கருப்பசாமி ( வயது 50| என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.