தென்காசி: மாவட்டத்தில் புகையிலை மற்றும் கஞ்சா விற்பனை செய்ததாக 5 நாட்களில் 92 நபர்கள் கைது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர் திரு. சைலேந்திர பாபு IPS அவர்களின் உத்தரவின் பேரிலும் ,தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருகிருஷ்ணராஜ் IPS அவர்களின் அறிவுறுத்தலின் பேரிலும் சட்டவிரோதமாக குட்கா,கஞ்சா விற்பனையை தடுக்கும் பொருட்டு மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் 28.03.2022 முதல் 01.04.2022 வரை 5 நாட்களில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ததாக 72 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 400 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 20 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 5.34 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.