சென்னை: ரூ.77 கோடியே 63 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 381 காவலர்குடியிருப்புகள், 4 காவல் நிலையங்கள், 3 இதர காவல்துறை கட்டிடங்கள், 7 ஊழல் தடுப்புமற்றும் கண்காணிப்புத் துறை அலுவலகக் கட்டிடங்கள், 50 சிறைத்துறை குடியிருப்புகள் மற்றும் மாதிரி வெடிகுண்டு அருங்காட்சியகம் ஆகியவற்றை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொளி மூலம் திறந்து வைத்தார்.
அந்த வகையில்,
சேலம் மாவட்டம், மேட்டூரில் 12 கோடியே 71 லட்சத்து 84 ஆயிரம்ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நிரந்தர காவல் பயிற்சிப் பள்ளி,
75 லட்சத்து 95 ஆயிரம்ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நிரந்தர காவல் பயிற்சிப் பள்ளிக்கான நிர்வாகக் கட்டிடம்,
3 கோடியே 20 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 200காவலர்களுக்கான பாளையம்,
என மொத்தம் 16 கோடியே 68 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய்மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவல்துறை கட்டடங்களை முதல்வர் எடப்பாடி . பழனிசாமி நேற்று காணொலிக் காட்சி மூலமாகத் திறந்துவைத்தார்.
மாநிலத்தின் அமைதியைப் பேணிப் பாதுகாப்பது, சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது, குற்றங்கள் நிகழாமல் தடுப்பது, குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தக்க தண்டனை பெற்றுக்கொடுப்பது போன்ற பல்வேறு முக்கிய பணிகளை காவல்துறை ஆற்றி வருகின்றது.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த காவல்துறையின் பணிகள் மேலும் சிறக்க, புதிய காவல் நிலையங்கள் மற்றும் காவலர் குடியிருப்புகளைக் கட்டுதல், காவல்துறை அலுவலகங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், ரோந்து பணிகளை மேற்கொள்ள புதிய வாகனங்களை வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், சேலம் மாவட்டம், மேட்டூரில் 12 கோடியே 71 லட்சத்து 84 ஆயிரம்ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நிரந்தர காவல் பயிற்சிப் பள்ளி, 75 லட்சத்து 95 ஆயிரம்ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நிரந்தர காவல் பயிற்சிப் பள்ளிக்கான நிர்வாகக் கட்டிடம்,3 கோடியே 20 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 200காவலர்களுக்கான பாளையம், என மொத்தம் 16 கோடியே 68 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய்மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவல்துறை கட்டடங்களை முதல்வர் எடப்பாடி . பழனிசாமி நேற்று காணொலிக் காட்சி மூலமாகத் திறந்துவைத்தார்.