சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், கடந்த 7 நாட்கள் சிறப்பு சோதனை மேற்கொண்டு, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக 71 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 75 குற்றவாளிகள் கைது. 371 கிலோ எடை கொண்ட குட்கா புகையிலைப் பாக்கெட்டுகள், 43.41 கிலோ மாவா, 1 சைக்கிள் மற்றும் 1 இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டது.
On the orders of Greater Chennai Police Commissioner, Tr. Shankar Jiwal, IPS, the police teams registered 71 cases for possessing and selling Gutkha tobacco products in last 7 days and 75 accused were arrested. 371 kgs Gutkha tobacco products, 43.41kgs Mava, 1 Bicycle and a two wheeler were recovered . தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்களின் ‘‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை.
(DABToP -Drive Against Banned Tobacco Products) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டதன்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில், உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில். காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு, தங்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 20.03.2022 முதல் 26.03.2022 வரையிலான 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 71 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 75 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து 371 கிலோ குட்கா புகையிலை பாக்கெட்டுகள், 43 கிலோ 41 கிராம் எடை கொண்ட மாவா, 1 இருசக்கர வாகனம் ஆகியவை கைப்பற்றப்பட்டது. இதில் குறிப்பிடும்படியாக, K-6 T.P.சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் கடந்த 22.03.2022 அன்று T.P. சத்திரம் பகுதியில் கண்காணித்து குட்கா புகையிலைப்பொருட்களை பதுக்கி வைத்திருந்த 1.லெட்சுமணப்பெருமாள், வ/52, த/பெ.செண்பகராமன், எண்.7, அழகம்மாள் நகர் 3வது தெரு, நெற்குன்றம், சென்னை 2.மாதவன், வ/35, த/பெ.மதி, எண்.61, பஜனை கோயில் தெரு, கோயம்பேடு, சென்னை 3.தனசேகர், வ/41, த/பெ.அருணாச்சலம், எண்.6 ஏ, வ.உ.சி நகர், அண்ணா நகர் கிழக்கு ஆகிய மூவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 99 கிலோ 550 கிராம் குட்கா புகையிலைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டது.
மேலும் K-8 அரும்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கடந்த 25.03.2022 அன்று அரும்பாக்கம், ராணி அண்ணா நகர் பகுதியில் உள்ள வீட்டில் குட்கா புகையிலைப்பொருட்களை பதுக்கி வைத்திருந்த ஆனந்தன், வ/42, த/பெ.சண்முகம், எண்.14, நாடராஜபுரம் தெரு, ராணி அண்ணா நகர், அரும்பாக்கம், சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 263 கிலோ 912 கிராம் குட்கா புகையிலைப்பொருட்கள், 1 செல்போன், மற்றும் 1 சைக்கிள் கைப்பற்றப்பட்டது. மேலும், சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதால், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் உள்பட சட்டவிரோத பொருட்களை கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.