36 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் எரிப்பு சென்னை, மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கைப்பற்றப்பட்ட 9-டன் எடையுள்ள கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை நீதிமன்ற உத்தரவின் படி போதை பொருள் தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளர் திரு.ரோஹித் நாதன் ராஜகோபால், இ.க.பா., அவர்கள் தலைமையில் செங்கல்பட்டு அருகே தென்மேல்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள மருத்துவ பொருள்கள் எரியூட்டும் ஆலையில் மூன்று பகுதிகளாக பிரித்து உலையிலிட்டு எரித்து அழிக்கப்பட்டன.