மதுரை : மதுரை டி.ஐ.ஜி. திருமதி. பொன்னிக்கு, கிடைத்த தகவலின் பேரில், டி.ஐ.ஜி.யின் சிறப்பு தனிப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் திரு. கவுதம், தலைமையில் தனிப்பிரிவு மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியில், காவல் துறையினர் , அதிரடி சோதனை செய்தனர். அப்போது பேரையூர் முக்குசாலை பகுதியில் உள்ள பெட்டிக்கடை ஒன்றில், தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் 25 மூடைகளில், பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. தனிப் பிரிவு காவல் துறையினர் , அவற்றை பறிமுதல் செய்தனர். 25 மூடைகளில், 354 கிலோ புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் இருந்தது. குட்கா பொருட்கள் வைத்து இருந்ததாக பேரையூர் குறிஞ்சி நகரை சேர்ந்த சம்சுதீன் (53), என்பவரை காவல் துறையினர், கைது செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி