காஞ்சிபுரம் : நன்னடத்தை ஆணையை மீறிய சரித்திரப் பதிவேடு குற்றவாளியான குணா ( எ ) குணசேகரன் (எ) படைப்பை குணாவுக்கு 340 நாட்கள் சிறை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காவல்நிலையங்களில் கொலை,கொலை முயற்சி, கொள்ளை மற்றும் அடிதடி வழக்குகளில் சம்மந்தப்பட்ட சுங்குவார்சத்திரம் காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளியான குணா ( எ ) குணசேகரன் ( எ ) படப்பை குணா ( 44 ) த/பெ.நமச்சிவாயம், எம்பார் கோயில் தெரு, மதுரமங்கலம் கிராமம், ஸ்ரீபெரும்புதூர் தாலுக்கா, காஞ்சிபுரம் மாவட்டம் என்பவர். தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவரை குண்டர் தடுப்புக காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
Dr.M.சுதாகர் அவர்களின் பரிந்துரையின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் Dr.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் மேற்படி எதிரியை ஓராண்டு தடுப்புக்காவலில் ( GOONDAS ) வைக்க கடந்த ( 16.02.2022 ) உத்தரவு பிறப்பித்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். தடுப்பு காவல் ஆணையினை சென்னை, அறிவுரை குழுமத்தால் உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், 19.03.2022 அன்று மேற்படி காவலில் இருந்து வந்த குணா (எ) குணசேகரனை திருப்பெரும்புதூர் உட்கோட்ட செயல்துறை நடுவர் அவர்களிடம் அளித்திருந்த நன்னடத்தை உறுதிமொழி கடப்பாடு ஆவணத்தை மீறிய குற்றத்திற்காக 340 நாட்கள் சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்