சென்னை : சென்னை, உரிய ஆவணம் இன்றி, வாலிபர் கொண்டு வந்த 7 கிலோ வெள்ளி ஆபரணங்களை, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ஆர்.பி.எப்., நேற்று பறிமுதல் செய்து. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணியரிடம், ரயில்வே காவல் துறையினர், மற்றும் ஆர்.பி.எப்., எனப்படும் ரயில்வே, பாதுகாப்பு படையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, (36), வயதுடைய வாலிபர் ஒருவரின் உடமைகளை, சோதனை செய்தனர்.
அப்போது, அவரிடம் 7 கிலோ வெள்ளி, ஆபரணங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இதற்கான, ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை. விசாரணையில் அவர், ஆந்திரா மாநிலம் மச்சிலிப்பட்டணம் பகுதியை சேர்ந்த, சலமலசெட்டி பவன்குமார், (36), என தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் பறிமுதல், செய்யப்பட்டுள்ள 3.93 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, வெள்ளி ஆபரணங்கள், மாநில வரித்துறை, அதிகாரியிடம் ஒப்படைக்கப் பட்டது.