வேலூர் : கஞ்சா கடத்திய இரண்டு நபர்கள் கைது. வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேஷ் கண்ணன்¸ இ.கா.ப.¸ அவர்களின் உத்தரவு படி காட்பாடி காவல் நிலைய போலீசார் மாநில எல்லை சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது ஆந்திராவில் இருந்து தேனி மாவட்டத்திற்கு கஞ்சா கடத்த முயன்ற 2 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 3.40 லட்சம் ரூபாய் மதிப்பிலான 34 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.