திருவள்ளூர் : பழவேற்காடு அருகே கூனங்குப்பத்தில் இருந்து 3 டன் ரேஷன் அரிசி ஆந்திராவுக்கு படகு மூலம் கடத்துவதாக கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் கூடுதல் இயக்குனர் சந்தீப் மிட்டல் உத்தரவின் பேரில் கடலோர பாதுகாப்பு குழுமம் ஆய்வாளர் சுரேஷ்குமார் மற்றும் உதவியாளர் மாலதி ஆகியோர் தலைமையிலான குழுவினர் அதிரடியாக விரைந்து ரேஷன் அரிசி கடத்தல் இடத்திற்கு விரைந்து வந்து ரேஷன் அரிசி கடத்தி வந்த மினி லாரி வாகனம் மற்றும் ஆந்திராவுக்கு கடத்த முயன்ற படகு மற்றும் 3 டன் அரிசி தலா 50 கிலோ எடை அளவுள்ள 60 மூட்டைகள் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிந்து திருவள்ளூர் மாவட்ட நுகர்பொருள் வாணிப கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட கூணங்குப்பம் சேர்ந்த சுரேந்தர் அரங்க குப்பத்தை சேர்ந்த சேகர் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்