திருச்சி : திருச்சி மாவட்டம், மணப்பாறை, அண்ணாவி நகரைச் சேர்ந்த முரளி, (16), மணிகண்டன், (13), மற்றும் செங்கேஸ்வரன் மகன் அஸ்வின்ராஜ், (14), குமார்,(13), ஆகிய நான்கு சிறார்களும், நேற்று மதியம், கீழ பூசாரிபட்டியில் உள்ள பாப்பான்குளத்தில் குளிக்கச் சென்றனர். குளித்துக் கொண்டிருந்த போது, ஆழமான பகுதிக்கு சென்ற அஸ்வின்ராஜ், முரளி, மணிகண்டன் ஆகியோர் அடுத்தடுத்து நீரில் மூழ்கினர். இதைப்பார்த்து குமார், சத்தம் போட்டதும், அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும், கிராம மக்களும் குளத்தில் இறங்கி, நீரில் மூழ்கிய சிறார்களை தேடினர். நீண்ட நேர தேடலுக்கு பின், மூன்று பேரையும் சடலமாக மீட்டனர். இவர்கள் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்தனர். ஒரே பகுதியைச் சேர்ந்த மூன்று சிறார்களும், உயிரிழந்தது மணப்பாறை பகுதியில் பெரும் சோகத்தைஏற்படுத்தியுள்ளது. மணப்பாறை காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.