மதுரை: சிந்தாமணியில் நள்ளிரவில் பெட்ரோல் பங்கில் கத்திமுனையில் 68ஆயிரம் கொள்ளை 3 ஆசாமிகளுக்கு வலைவீச்சு மதுரை மார்ச் 19 சிந்தாமணியில் பெட்ரோல் பங்கில் நள்ளிரவில் அரிவாளை காட்டி மிரட்டி ரூபாய் 68 ஆயிரம் கொள்ளையடித்து சென்ற மூன்று ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை சிந்தாமணி நெடுங்குளம் மெயின் ரோட்டில் பெட்ரோல் பங்குஒன்று உள்ளது.
அங்கு நள்ளிரவில் வந்த 3 மர்ம நபர்கள் அங்கு பணியில் இருந்த ராஜேஷ் குமார்26 என்ற வாலிபரை அரிவாள் முனையில் மிரட்டி அங்கு பெட்ரோல் பங்கில் இருந்த பணம் ரூபாய் 68 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர் .இந்த சம்பவம் குறித்து ராஜேஷ்குமார் கீரைத்துரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையடித்து சென்ற மூன்று ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி