மதுரை : மதுரை மாவட்டம் , சுப்ரமணியபுரம் வசந்த நகரைச் சேர்ந்த திரு.சீனிவாச சங்கர நாராயணன், என்பவர் வீட்டில் கதவை உடைத்து 30, பவுன் தங்க நகைகள், மற்றும் ரொக்கம் எட்டரை லட்சம் , திருடிய மதுரை ஆண்டாள் புரத்தை சேர்ந்த குற்றவாளி கணேசன், மற்றும் மதுரை வைத்தியநாத புரத்தை சேர்ந்த குற்றவாளி பாண்டியராஜன், இருவரும் இந்த திருட்டு சம்பவத்தில், ஈடுபட்டது தெரியவந்தது. மேற்படி குற்றச் சம்பவத்தில் , ஈடுபட்ட நபர்களை மதுரை மாநகர காவல் ஆணையர்திரு. செந்தில்குமார் I.P.S, அவர்கள் மற்றும் காவல் துணை ஆணையர் தெற்கு சரகம் திரு .ஸ்ரீனிவாச பெருமாள், அவர்கள் உத்தரவின்பேரில், திடீர் நகர் சரகம் திரு .ரவிந்திர பிரகாஷ், அவர்களின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு இரவு பகல் பாராது கண்விழித்து அடுத்த 24 மணி நேரத்தில், குற்றவாளி பாண்டியராஜனை கைது செய்தது.
விசாரணையில் மேற்படி 30, சவரன் நகைகள் மற்றும் ரூபாய் 8.5 லட்சம் பணத்தை கைப்பற்றினர். மேலும் குற்றவாளி கணேசன், தலைமறைவாக இருப்பதால், தனிப்படையினர் தேடி வருகின்றனர். இந்த திருட்டு வழக்கில், சிறப்பாக செயல்பட்டு 24 மணி நேரத்தில், திருடுபோன தங்க நகைகள் மற்றும் பணத்தை மீட்டு எடுத்த தனிபடையைச்சேர்ந்த திரு . ரவீந்திரதாஸ், காவல் உதவி ஆணையர் , திடீர் நகர் சரகம் காவல் ஆய்வாளர் திருமதி. சங்கீதா, சுப்பிரமணியபுரம் குற்றப்பிரிவு திரு. பன்னீர் செல்வம் (ssi), திரு . சகாய கிறிஸ்டி அமலநாதன் (ssi), திரு ஜெகதீசன் த. கா 1914, திரு. இருதய ராஜா த.கா 3839, திரு .சுந்தரம் த.கா 1566, திரு .அன்பழகன் மு.நி.கா 2964 மற்றும் திரு.சதீஷ்குமார் மு.நி.கா 3083, ஆகியோர்களை மதுரை காவல் ஆணையர், மற்றும் காவல் துணை ஆணையர் ,அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.E. விஜயராஜ்