தஞ்சை: கும்பகோணம் மேலக்காவிரி பகுதியில் ஸ்டீல் பைப்புகளை திருடிய இரண்டு வாலிபர்கள் புகார் கொடுத்த 24 மணி நேரத்தில் கைது. கும்பகோணம், மார்ச்.15- கும்பகோணம் புறப்பகுதியான மேலக்காவேரி பகுதியில் நேற்று முன் தினம் 12.03.22 இரவு தனது வெல்டிங் பட்டறையில் வெளியே அடிக்கி வைத்திருந்த ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பைப்புகள் சுமார் ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ளவை காணவில்லை என்று அதன் உரிமையாளர் நேற்று கிழக்கு காவல் நிலையத்தில் புகார் தந்ததை தொடர்ந்து தஞ்சை மாவட்ட கண்காணிப்பாளர் திருமதி ரவளிபிரியா. ஐபிஎஸ் அவர்களின் உத்தரவின் பேரில் கும்பகோணம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு அசோகன் மற்றும் கும்பகோணம் கிழக்கு காவல் ஆய்வாளர் அழகேசன் ஆகியோர் மேற்பார்வையில் கும்பகோணம் தனிப்படை உதவி ஆய்வாளர் திரு கீர்த்திவாசன்.
SSI ராஜா, HC பாலசுப்ரமணியம், சுரேஷ், நாடிமுத்து, ஜனார்த்தனன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டார்கள். இதில் இத்திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது கும்பகோணம் புறப்பகுதி ஏராகரம் வழிநடப்பு மூப்பக்கோவில் பகுதியை சேர்ந்த மார்டின் மகன் அமர்நாத் 25 அதே பகுதியை சேர்ந்த முருகன் மகன் நிசாந்த் என்பதும் அவர்கள் இருவரும் சேர்த்து அந்த பொருள்களை ஒரு லோடு ஆட்டோவில் வந்து அந்த பொருட்களை திருடிச் சென்றுள்ளது தெரிய வந்தது அதனை தொடர்ந்து , தனிப்படை போலீசார் குற்றத்தில் ஈடுபட்ட இரு நபர்களையும் பிடித்து அவர்களிடமிருந்து திருடு போன பொருட்களை மீட்டனர். திருட்டுக்கு பயன்படுத்திய மகேந்திரா ஆல்பா லோடு ஆட்டோ ஒன்று மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து மேற்படி குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர். புகார் கொடுத்த 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்து திருடு போன பொருட்களை மீட்ட தனிப்படை போலீசாரை காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டினார்கள்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்