தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் தற்போது பயிற்சியில் இருந்து வரக்கூடிய 226 தொழில்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளர்களுக்கு காவல்துறை கூடுதல் இயக்குநர்கள் திரு.கந்தஸ்வாமி¸ இ.கா.ப.¸ திரு.வெங்கடராமன்¸ இ.கா.பா.¸ மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் திரு.விக்ரமன்¸ இ.கா.ப.¸ திரு.சசாங்சாய்¸ இ.கா.ப. மற்றும் திருமதி. சண்முகபிரியா ஆகியோர்கள் சைபர் கிரைம் பற்றிய நுணுக்கங்களையும்¸ முந்தைய வழக்குகளில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைமுறைகளையும் எடுத்துக் கூறி இனிவரும் காலங்களில் காவல்துறையில் சைபர் கிரைம் குற்றங்களை தடுக்கவும் பயிற்சி அளித்தனர்.
மேலும் அவர்களின் சந்தேகங்களுக்கு உரிய விளக்கம் அளிக்கப்பட்டு களந்துரையாடலும் நடத்தப்பட்டது. முடிவில் தொழில்நுட்ப பிரிவு பயிற்சி உதவி ஆய்வாளர்கள் தாங்கள் சைபர் கிரைம் பிரிவில் பணிபுரிய மிகுந்த ஆர்வமுடன் உள்ளதாகவும் அதன் முலம் சைபர் கிரைம் குற்றம் நிகழாமல் தடுப்போம் எனவும் உரிய விசாரணை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட நபர்களின் பிரச்சனைகளை தீர்ப்போம் எனவும் உறுதி பூண்டனர்.