மதுரை: மதுரை மாநகரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 226 விநாயகர் சிலைகளை நேற்று மாலை விளக்குத்தூண் விநாயகர் கோவிலில் இருந்து ஊர்வலமாக நான்கு மாசி வீதிகள் வழியாக எடுத்துச்செல்லப்பட்டு பேச்சியம்மன் படித்துறை அருகில் நல்ல முறையில் வைகை ஆற்றில் கரைக்கப்பட்டது.
மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் உத்தரவுப்படி பாதுகாப்பு பணிக்கு 1500 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள், 200 தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் மற்றும் 300 ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் வெகு சிறப்பாக பாதுகாப்பு பணிபுரிந்த காவல்துறையினரை காவல் ஆணையர் பாராட்டினார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்