தென்காசி: தென்காசி மாவட்ட 206 காவலர்களுக்கு பணியிட மாற்றம் கவுன்சிலிங் நடைபெற்றது.
தென்காசி மாவட்டம், தமிழக காவல்துறையில் பணிபுரிந்து வரும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் ஓர் காவல் நிலையத்தில் மூன்று ஆண்டுகள் பணி புரிந்தால் பணியிடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில் தென்காசி மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து வரும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் அவர்களது குடும்பம், உடல்நிலை போன்றவற்றை கருத்தில் கொண்டு நேரடி கவுன்சிலிங் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணராஜ் IPS அவர்கள் தலைமையில் இன்று 26.03.2022 நடைபெற்றது.
இந்த கவுன்சிலிங்கில் 206 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு விருப்பப்படும் காவல் நிலையம் வழங்க ஏற்பாடு செய்யும் விதமாக அமைந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஒரு பணியிட மாற்றத்தால் ஒவ்வொரு காவலர்களின் குடும்பம் மற்றும் குழந்தைகளின் படிப்பு மேலும் உடல்நிலை போன்றவற்றை கருத்தில் கொண்டு கவுன்சிலிங் முறை மூலம் பணியிட மாற்றம் செய்தது மிகவும் பயன்படும் விதமாக அமைந்துள்ளது என காவலர்கள் தெரிவித்ததுடன் அவர்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்தனர்.