விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வெள்ளையாபுரம் ராஜீவ்காந்தி காலனியைச் சேர்ந்த 20 வயது வாலிபர், ஊமச்சிகுளத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவர் இதே பகுதியில் வசிக்கும் பிளஸ்2 மாணவியை கடத்திச் சென்று உள்ளார். எனவே அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இந்த நிலையில் அந்த சிறுமி மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் இருந்து போன் செய்து உள்ளார். இதையடுத்து பெற்றோர் மாணவியை நேரில் வந்து அழைத்துச் சென்று விசாரித்து உள்ளனர்.
அப்போது அந்த வாலிபர் திருமண ஆசைகாட்டி சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் இது தொடர்பாக ஊமச்சிகுளம் போலீசில் புகார் கொடுத்தனர். இதன் அடிப்படையில் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், ஊமச்சிகுளம் டி.எஸ்.பி காட்வின் ஜெகதீஷ்குமார் உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர் சாந்தி பாலாஜி வழக்கு பதிவு செய்து சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியதாக 20 வயது வாலிபரை கைது செய்து, அவரிடம் இது தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.