திருப்பூர் : திருப்பூர் கள்ளக்குறிச்சி வெள்ளிமலை, பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி என்பவரது மகன் கலியமூர்த்தி (26), அதே பகுதியை சேர்ந்த தங்கராஜ் என்பவரது மகன் மூர்த்தி (25), இவர்கள் இருவரும் காங்கயம் சிவன்மலையை அடுத்த சிக்கரசம்பாளையத்தில், உள்ள தனியாருக்குச் சொந்தமான தேங்காய் களத்தில் தங்கி வேலை பார்த்து வந்தனர். இவர்கள் இருவரும் ஊரில் இருந்து சாராயத்தை கடத்தி வந்து பொங்கலூர் பகுதியில், விற்பனை செய்வதாக அவினாசிபாளையம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில்காவல் துறையினர் ,கடந்த மாதம் 13-ந் தேதி மருதுறையான் வலசு பகுதியில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டபோது அவர்கள் கலியமூர்த்தி, மூர்த்தி என்பதும், சாராயம் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதைடுத்து அவர்கள் 2பேரையும், கைது செய்தகாவல் துறையினர் , அவர்கள் கூறியதன் பேரில் 80 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இந்த நிலையில், சாராயம் விற்பனையில் ஈடுபட்ட மேற்கண்ட இருவர் மீதும் குண்டர் சட்டத்தில், நடவடிக்கை எடுக்க காவல் சூப்பிரண்டு திரு.சசாங் சாய், மாவட்ட கலெக்டரிடம் பரிந்துரை செய்தார். இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டரின் பரிந்துரையின் பேரில் மேற்கண்ட இருவர் மீதும் குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கான உத்தரவு சிறையில், இருக்கும் அவர்களிடம் வழங்கப்பட்டது.