கடலூர் : கடலூர் சிதம்பரம், புதுச்சத்திரம் அடுத்த பெரியக்குப்பத்தில், உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில், இருந்து லாரியில், இரும்பு பொருட்கள் கடத்தி செல்லப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடலூர் துறைமுக ராஜாங்கம் தலைமையிலான போலீசார் கடலூர் அடுத்த நொச்சிக்காடு பாலம் அருகே வாகன தணிக்கையில். ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை காவல் துறையினர், மறித்து சோதனை செய்தனர். அப்போது அந்த லாரியில் இரும்பு பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து லாரியில், வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் புதுச்சேரியை சேர்ந்த சிவகுமார் (வயது 51), மாதேஸ்வரன் (42), திருச்சி மணப்பாறையை சேர்ந்த பாலு (41), ஆகியோர் என்பதும், புதுச்சத்திரம் அடுத்த பெரியக்குப்பம் எண்ணெய் சுத்திகாிப்பு ஆலையில், இருந்து இரும்பு பொருட்களை திருடி லாரியில், கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து சிவக்குமார், மாதேஸ்வரன், பாலு ஆகியோரையும், கடத்தப்பட்ட 2 டன் இரும்பு பொருட்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாாியையும் பறிமுதல் செய்து புதுச்சத்திரம் காவல் துறையினரிடம் துறைமுக காவல் துறையினர், ஒப்படைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து புதுச்சத்திரம் காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து சிவக்குமார், உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.