கோவை: கோவை அருகே உள்ள கோவைபுதூர் அல்பா நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி பரிமளா (வயது 45 )இவர் அங்கு சிப்ஸ் கடை நடத்தி வருகிறார் .நேற்று கடையில் இருந்தபோது 2 ஆசாமிகள் ஒரே பைக்கில் கடைக்கு வந்தனர். அவர்களில்ஒருவன் இறங்கி வந்து சிப்ஸ் கேட்பது போல் நடித்து பரிமளா கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்தான் .பரிமளா செயினை பிடித்துக் கொண்டதால் 2 பவுன் செயின் மட்டும் கொள்ளையனிடம் மாட்டிக்கொண்டது. பின்னர இருவரும் பைக்கில் தப்பிச் சென்றுவிட்டனர்.இதுகுறித்து குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது . போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.