கரூர்: கரூர் மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் பஜாரில் நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்ததில் தலை மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டு வலிப்பில் துடித்துக் கொண்டு இருந்தவரை அவ்வழியாக ரோந்து அலுவல் சென்ற கரூர் நகர காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. பாஸ்கரன் மற்றும் அவருடன் சென்ற பயிற்சி காவலர் திரு. மாரிமுத்து ஆகிய இருவரும் சேர்ந்து பாதிக்கப்பட்ட இளைஞருக்கு முதலுதவி செய்து பொதுமக்கள் உதவியுடன் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதையறிந்த கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆர். பாண்டியராஜன் அவர்கள் உடனடியாக அவர்களை அழைத்து அவர்களது சேவையைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தும், பொன்னாடை அணிவித்தும் கௌரவ படுத்தி அனுப்பிவைத்தார்