கரூர்: அந்தியூர் அருகே உள்ள வேலம்பட்டி பகுதியில், ஈரோடு உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் தங்கவேல் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேப்படும்படியாக வந்த சரக்கு வாகனம் ஒன்றை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இந்த சோதனையில் பர்கூர் வழியாக கர்நாடக மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்த் செல்லுவது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த பர்கூர் வேலம்பட்டி பகுதியை சேர்ந்த சிவலிங்கம் (வயது 42) என்பவரை கைது செய்து சரக்கு வாகனம் மற்றும் 1,500 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.