சென்னை: சென்னை, அடையார் காவல் மாவட்ட எல்லைக்குட்பட்ட வேளச்சேரி, சைதாப்பேட்டை, செம்மஞ்சேரி, குமரன் நகர் ஆகிய பகுதியில் நடந்த திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றிவாளியை விரைந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டதன் பேரில், S-7 மடிப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.சி.மகேஷ்குமார் தலைமையில் புனித தோமையர் மலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு.ஐயப்பன், ஜெ-12 கானாத்தூர் தலைமைக்காவலர் திரு.விஜயகுமார் (த.கா.18066) S-10 பள்ளிக்கரணைகாவல் நிலைய தலைமைக்காவலர் திரு.வீராசாமி (த.கா.35495), S -7 மடிப்பாக்கம் காவல் நிலைய தலைமைக்காவலர்கள் திரு.ராமலிங்கம் (த.கா.35795), திரு.சி.ஜெபசிங் (த.கா.35712) S-9 பழவந்தாங்கல் காவல் நிலைய தலைமைக்காவலர் திரு.நாராயணன் (த.கா.36042) ஆயுதப்படை காவலர்கள் திரு.பாலமுருகன், (கா.50570), திரு.வசந்தராஜ் (கா.30430) ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை செய்து மேற்படி பகுதிகளில் வீடுகளின் பூட்டை உடைத்து திருடிய 1. கமலக்கண்ணன், வ/30, 2.தட்சிணாமூர்த்தி (எ) அனாதி, வ/44, ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து 90 சவரன் தங்க நகைகள் மீட்கப்பட்டது. சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் உயர்திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் (30.08.2019) அன்று நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.