சென்னை : சென்னை, தடை செய்யப்பட்ட பொருட்களை, ஒழிப்பதற்காக சென்னை பெரு நகர காவல் ஆணையாளர் திரு. சங்கர் ஜிவால், ‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை’க்கு உத்தரவிட்டுள்ளார்.அதன்படி, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை, கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.அதன் தொடர்ச்சியாக, பள்ளி, கல்லுாரி மற்றும் இதர இடங்களில் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. புகையிலை பொருட்கள் வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக, 132 வழக்குகளில் 132 நபர்கள் ஒரே நாளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், அவர்களிடமிருந்து 70 ஆயிரத்து 782 கிலோ ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பாக்கெட்டுகள், 232 சிகரெட் பாக்கெட்டுகள் மற்றும் ரொக்கம் 2,730 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. காவல்துறையினர், தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதால், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருப்பவர்கள், மற்றும் கடத்தி வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, காவல் ஆணையாளர் திரு. சங்கர் ஜிவால், எச்சரிக்கை விடுத்துள்ளார்.