தருமபுரி: தருமபுரி நகர் பகுதி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனம் திருட்டு நடைபெற்று வந்தது இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சி.கலைச்செல்வன்.இ.கா.ப அவர்கள் உத்தரவிட்டார் அதன் அடிப்படையில் நல்லம்பள்ளி அடுத்த வெள்ளக்கல் பகுதியில் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.வினோத் அவர்களின் மேற்பார்வையில் தொப்பூர் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரை நிறுத்தி அவர்களிடம் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகித்து பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள் கோவை மாவட்டம் ஒத்தக்கால் மண்டம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் (50), மேட்டுப்பாளையத்தை சேர்ந்த கார்த்திகேயன் (40) என்பதும் அவர்கள் ஓட்டி வந்தது திருட்டு வாகனம் என்பதும் தெரியவந்தது இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் இருவரும் அதியமான்கோட்டை ,தொப்பூர் பகுதி களில் 4 இருசக்கர வாகனங்கள் தருமபுரி நகர பகுதியில் 9 இருசக்கர வாகனங்கள் திருடியதும், அதில் 4 இருசக்கர வாகனங்களை காரிமங்கலம் திண்டல் பகுதியை சேர்ந்த குறளரசன் என்பவரிடம் விற்பனை செய்தது தெரிய வந்தது இதையடுத்து 13 வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் குறளரசனையும் கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.
தர்மபுரியில் இருந்து நமது நிருபர்
க.மோகன்தாஸ்.