சென்னை: 12 ஐபிஎஸ் , 20 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
தமிழகத்தில் பணியாற்றும் 12 காவல்துறை கண்காணிப்பாளர்கள் டிஐஜிக்களாக தகுதி உயர்த்தப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை உள்துறைச் செயலாளர் பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் 2004-ம் ஆண்டு பேட்ச் அதிகாரிகளான காவல்துறை எஸ்பிக்கள் 12 பேர் டிஐஜிக்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் பெயர் விபரம் வருமாறு:
1.செந்தில் வேலன்,
2. அவினாஷ் குமார்,
3. ராதிகா,
4. ஜெயகவுரி,
5. அஸ்ரா கார்க்,
6.ஏ.ஜி.பாபு,
7.பி.கே.செந்தில்குமாரி,
8.ஏ.டி.துரைகுமார்,
9.சி.மகேஷ்வரி,
10. ஆசியம்மாள்,
11.லலித லட்சுமி,
12.என்.காமினி.
இதற்கான உத்தரவை உள்துறைச்செயலாளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்.