சென்னை : காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அடுத்த கரசங்கால் எல்.ஐ.சி. நகர் பகுதியை சேர்ந்தவர் பால் (85), ஓய்வுபெற்ற விஞ்ஞானி. கடந்த 2 நாட்களுக்கு முன்பு பால் வீட்டில் வைக்கப்பட்டிருந்த 100 பவுன் நகை மாயமானதை கண்டு சசிகலா அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர், கணவர் பாலிடம் தெரிவித்தார். இது குறித்து அவர் மணிமங்கலம் காவல் துறையில், புகார் அளித்தார். அதன்பேரில் காவல் துறையினர் , வழக்குப்பதிவு செய்து வீட்டில் இருந்தவர்களிடம் விசாரித்து வருகின்றனர். நகை மாயமானபோது வீட்டின் பூட்டு உடைக்கப்படவில்லை, என்று காவல் துறையினர் , தெரிவித்தனர்.
வீட்டில் வேலை செய்து வரும் பணிப்பெண் மற்றும் பால், சசிகலாவிடம்காவல் துறையினர் , தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில், உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் அதில் பதிவான காட்சிகளையும் பார்த்து விசாரணை செய்யப்படுகிறது. 3 தனிப்படைகள் அமைத்து காவல் துறையினர் தீவிர விசாரணை, மேற்கொண்டு வருகின்றனர்.