மதுரை: ஐராவத நல்லூரில் அம்மை நோய்க்கு சிறுமி பலி மதுரை மார்ச் 12 ஐராவதநல்லூரில் அம்மை நோய் வந்த சிறுமி பலியானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஐராவதநல்லூர் ராஜா நகரை சேர்ந்தவர் சரவணகுமார் மகள் வர்ஷிதா 10. இவர் சிறிய அம்மைநோய் நோயால் பாதிக்கப்பட்டார். இந்த நிலையில் திடீரென்று அளவுக்கு அதிகமாக காய்ச்சல் வந்தது.உடனடியாக அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தந்தை சரவணகுமார் கொடுத்த புகாரில் தெப்பக்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி