தென்காசி: சட்டவிரோதமாக விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த நபர் கைது.1.5 கிலோ கஞ்சா பறிமுதல்தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் IPS அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தடை செய்யப்பட்ட குட்கா, லாட்டரி சீட்டுகள்,மதுபாட்டில்கள், கஞ்சா போன்றவற்றின் விற்பனையை தடுக்கும் விதமாக தீவிரரோந்துப்பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் சிவகிரி காவல்நிலைய எல் லைக்குட்பட்ட பகுதியில் சார்பு ஆய்வாளர் திரு. அமிர்தராஜ் அவர்கள் ரோந்து பணியில் இருந்தபோது அங்கு சக்திவேல் (62), மற்றும் அவரது மகன் பூமாரி (19) ஆகியோர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக கொடுத்த தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் திரு. மனோகரன் அவர்கள் விசாரணை மேற்கொண்டு.
மேற்படி விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த சிவகிரி குமார புரத்தைச் சேர்ந்த சக்திவேல் (62) மற்றும் அவரது மகன் பூமாரி (19) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து சக்திவேல் என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தார்.மேலும் அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 1.5 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.. தலைமறைவாக உள்ள பூமாரி என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்..