திருச்சி: ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு பகுதியில், புதிய மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு, திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி முரளிசங்கர் தலைமை வகித்து, புதிய நீதிமன்றத்தை திறந்து வைத்து பேசியதாவது: திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் சேர்த்து, 29 ஆயிரத்து, 510 உரிமையியல் வழக்குகள், 16 ஆயிரத்து, 70 குற்றவியல் வழக்குகள் உட்பட, 45 ஆயிரத்து, 580 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மாநகரில் மட்டும் 5,705 உரிமையியல் வழக்குகள் உள்ளன. புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள இந்நீதிமன்றத்தில், 2,000 வழக்குகள் விசாரிக்கப்படும். ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும் என்பதற்காக, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு, அதனை கண்காணித்தும் வருகிறது. நீதிபதிகள், வக்கீல்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் இணைந்து, மாவட்ட நிர்வாகம், போலீசாரின் ஒத்துழைப்போடு மக்களுக்கு உரிய காலத்தில் உரிய நீதி வழங்கப்படும் என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு S.சிவராசு IAS அவர்களும், திருச்சி மாநகரக் காவல் ஆணையர் டாக்டர் A.அமல்ராஜ் IPS அவர்களும், திருச்சி [ புறநகர் ] மாவட்ட கண்காணிப்பாளர் திரு .ஜிவுள் ஹக்கில் IPS அவர்களும், மூத்த வழக்கறிஞர்களும், நீதிமன்ற ஊழியர்களும், ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் திரு M_சுப்ரமணியன் அவர்கள் ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் திரு ராமசந்திரன் அவர்கள், ஆய்வாளர் திரு ராஜேந்திரன் அவர்கள் பொதுமக்களும் பெரும் திரலாக கலந்து கொண்டனர்.
அத்துடன் திருச்சிராப்பள்ளிமாநகராட்சி ஸ்ரீரங்கம்கோட்டம் சார்பில் அங்கு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இருந்த 73 வது சுகந்திரத்தினத்தை முன்னிட்டு மரக்கன்றுநடும்விழாவில் நீதி அரசர்களும் காவல்துறை அதிகாரிகளும் சமூக ஆர்வலர்களும் பொது மக்களும் மரக்கன்றுகளை நட்டு விழாவை சிறப்பித்தனர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி