ஈரோடு: ஈரோட்டில் செயல்பட்டு வரும் ரெட் டாக்ஸி நிறுவனம் சொந்தமாகவும், ஒப்பந்த அடிப்படையிலும் ஏராளமான வாகனங்கள் இயங்கி வருகிறது. இந்நிலையில் தற்போது உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாகவும் விலைவாசி உயர்வு காரணமாகவும் வாடகைக்கு செல்லும் கார்களுக்கு வழங்கப்படும் வாடகை தொகை மிக குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து அலுவலகத்தில் புகார் தெரவித்தும் வாடகையை உயர்த்தாதால் கால்டாக்ஸி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கால்டாக்ஸி வாகனங்களுக்கு தற்போது வழங்கப்படும் குறைந்தபட்ச வாடகை 95 ரூபாயை 105 ரூபாயாக மாற்ற வேண்டும், கால் சென்டர் கட்டணங்களை குறைக்க வேண்டும், வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு காப்பீடு செய்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.