வேலூர்: போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பில் வேலூர் மாவட்டம் அரக்கோணம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.துரை பாண்டியன் அறிவுறுத்தலின்படி அரக்கோணம் உட்கோட்ட காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.முத்துராமலிங்கம் உட்பட காவலர்கள் பலர் கலந்து கொண்ட காவலர்கள் தின விழா டிசம்பர் 24 ஆம் தேதி நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது.
போலி என்கவுண்டர், பொய் வழக்குகள், மக்கள் மீதான தடியடி, கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், பாலியல் வல்லுறவு, இன்னும் இன்னும் பல்வேறு சட்டவிரோத செயல்களை செய்யாத, அவற்றில் ஈடுபடாத, இரவு பகல் பாராமல் உயிரை பணயம் வைத்து காவல் பணியாற்றும் உண்மையான நேர்மையான நேசமிகுந்த காவலர்களை வாழ்த்திப் பாராட்ட ஆண்டு தோறும் டிசம்பர் 24 ஆம் தேதி காவலர்கள் தினமாக அனுசரிக்கப்படுகின்றது.
போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழின் ஆசிரியரும் காவலர் தின நிறுவனருமான திரு.அ.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி, போலீஸ் நியூஸ் பிளஸ் தினமின்னிதழ் குடியுரிமை நிருபரும், நியூஸ்மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா ஓளிபரப்பு ஊடக பிரிவு தமிழ்நாடு மாநில தலைவருமான திரு.
S.பாபு, ஓளிபரப்பு ஊடக பிரிவு வேலூர் மாவட்ட பொது செயலாளர் திரு.T.கஜேந்திரன் மற்றும் குடியுரிமை நிருபர்கள் காவலர் தின விழாவினை காவலர் குடியிருப்பில் ஏற்பாடு செய்தனர்.
இவ்விழாவில் காவல் அரக்கோணம் உட்கோட்ட ஆய்வாளர் திரு.முத்துராமலிங்கம் தலைமையில் காவலர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் காவலர்கள் குடும்பத்தை சார்ந்த உறுப்பினர்கள் மற்றும் குழந்தைகள், அப்பகுதி பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு காவலர்களுக்கு காவலர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்தனர். காவல் அரக்கோணம் உட்கோட்ட ஆய்வாளர் கேக் வெட்டி காவல்துறையினர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்.