கோவை: கோவை குனியமுத்தூர், ஹர்ஷா கிளாசிக் கார்டன் பகுதியை சேர்ந்தவர் பரூக் (வயது 51). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து தொழில் செய்து வந்தார்.மேலும் புரோக்கராகவும். இருந்தார்.. இந்த நிலையில் இவரது முகநூல் கணக்கிற்கு லண்டனைச் சேர்ந்த சன்ஷைன் என்ற பெயரில் ஒரு பெண் பிரண்ட் ரிகொஸ்ட் கொடுத்தார்.அதனை இவர் ஓ.கே.செய்த போது அந்த பெண் வாட்சப் மூலம் தொடர்பு கொண்டார். லண்டனில் ஆடை வியாபாரம் செய்வதாகவும் .இந்திய சேலைகளுக்கு அங்கு கிராக்கியாக இருப்பதால் சேலைகளை வாங்கி அனுப்பினால் லாபத்தில்பங்கு தருவதாகவும் கூறினார்.
இதற்காக ரூ.32 லட்சம் மதிப்புள்ள பவுண்ட்ங்களை விமானம் மூலம் பார்கலில் அனுப்பி வைப்பதாகவும் கூறினார். இந்த நிலையில் பாரூக்கின் போனுக்கு அழைப்பு வந்தது.விமான நிலையத்தில் பார்சல் வந்து இருப்பதாகதம் அதனை பெற வேண்டுமானால் ரூ.14 லட்சத்து 200 அனுப்புவதாகவும் கூறியுள்ளனர். இதனை உண்மை என்று நம்பிய பாரூக் ரூ.14 லட்சத்தை ஆன்லைன் மூலம் அனுப்பினார். அதன் பின்னர் லண்டன் பெண்ணிடம் இருந்து எந்த செல்போன் அழைப்பும் வரவில்லை. அதன் பின்னர்தான் தான் மோசடி செய்யப்பட்டதை பாரூக் உணர்ந்தார்.
இது குறித்து கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தன்னுடைய மகளுக்கு திருமணம் செய்வதற்காக வைத்திருந்த நகை உள்பட அனைத்தையும் விற்று இந்த தொகையை பாரூக் அனுப்பியதாக தெரிகிறது . இழந்த தொகையை மீட்டு தருமாறு சைபர் கிரைம் போலீஸ் அதிகாரிகளை பாரூக் கேட்டுக்கொண்டார்.
இதே போல கோவை நீலிகோணம்பாளையத்தை சேர்ந்தவர் குமணன் (வயது 35).தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைஸராக வேலை செய்கிறார். இவரது செல்போனுக்கு ஆன்லைனில் ஒரு லிங்க் வந்தது .அதனை இவரை தொடர்பு கொண்டபோது அதில் பேசியவர்கள் ,மருத்துவ உபகரணங்களை வாங்கி விற்கும் தொழில் செய்வதாகவும், இந்த தொழிலில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாகவும், 60 நாட்களுக்குள் இன்சென்டிவ் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறி னார்கள்.
இதனை நம்பிய குமணன் ரூ.12 லட்சத்து 95 ஆயிரத்து 185 – ஐஅனுப்பினார். ஆனால் அவர் செலுத்திய தொகை. இன்சென்டிவ் உள்ளிட்ட எந்த தொகையையும் திருப்பிதரவில்லை இதைத்தொடர்ந்து கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார் போலீசார். மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார்வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.ஆன்லைனில்எந்தலிங்கையும்.தொடர்புகொள்ளவேண்டாம்என்றும்,முகநூலில்அடையாளம்தரியாதவர்களை நண்பர்களாக சேர்க்க வேண்டாம் என்றும் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.